155வது பிறந்தநாள் விழா திருச்சியில் செப்.5ந் தேதி வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு மாநகர் மாவட்ட பாஜகவிற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் அழைப்பு

Sep 2, 2026 - 19:24
Sep 4, 2026 - 11:04
 69
155வது பிறந்தநாள் விழா திருச்சியில் செப்.5ந் தேதி வ.உ.சி.சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு மாநகர் மாவட்ட பாஜகவிற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் அழைப்பு

155-வது பிறந்தநாள் விழா

திருச்சியில் செப் 5ந்தேதி வஉசி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு

 மாநகர் மாவட்ட பா.ஜ.கவிற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் அழைப்பு

 திருச்சி

 சுதந்திரப் போராட்ட வீரரும் , செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க தலைவர் செந்தில்பிள்ளை தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்வு 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டிமுத்துவிடம், திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருநாவுக்கரசு வழங்கினார்..அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் பாலு, செய்தி தொடர்பாளர் வ.உ.சி.கண்ணன், பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், மாவட்ட செயலாளர் காளீஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் லெனின் பாண்டியன், மண்டல தலைவர் கார்த்திக் மற்றும் நவநீத கிருஷ்ணன் உடனிருந்தனர்.மேலும் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்களையும் சந்தித்து வ உ சி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறுஅழைப்பு விடுத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0