திருச்சியில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் கரூர் பைபாஸ் சாலையில் புதிய கிளை திறப்பு விழா
திருச்சியில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ்
கரூர் பை – பாஸ் சாலையில் புதிய பிரம்மாண்ட கிளை திறப்பு விழா
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ்'ன் கோலாகல திறப்புவிழா நடந்தது.1926ம் ஆண்டு தொடங்கப்பட்டுஇந்நிறுவனம் 100 ஆண்டு கால பட்டு பாரம்பரியமும் மக்களின் பேராதரவுடன் புகழ்பெற்ற நிறுவனமாக காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் திகழ்ந்து வருகிறது. சென்னை,காஞ்சிபுரம், வேலூர். திருவண்ணாமலை கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை தொடர்ந்து, தற்போது சோழ மண்டலமாம் திருச்சி காவிரி கரையில் தனது 7வது புதிய கிளையைபச்சையப்பாஸ் சில்க்ஸ் தொடங்கப்பட்டது.திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் மலபார் ஜூவல்லரி எதிரில்) அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட புதிய கிளையின் கோலாகல திறப்பு விழா நடைபெற்றது . புதிய கிளையை முன்னாள் அமைச்சர் கே.என் நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இதில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொது செயலாளர் கோவிந்தராஜூலு, ரோட்டரி நிர்வாகி அல்லிராணி, பனானா லீப் பிரியா, லயன்ஸ் டேட்ஸ் அனிதா, துணை மேயர் திவ்யா, சுமதி பப்ளிகேஷன்ஸ் ஹரிஹரூன், ஸ்ரீ தைலா சில்க்ஸ் கணபதி மற்றும் சுஜாதா, பச்சையப்பாஸ் சில்க்ஸ் விஜயலட்சுமி, சத்யா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சொந்த தறியில் நெய்யப்பட்ட தரமான காஞ்சிபட்டு திருச்சியில் காஞ்சிபுரம் விலையிலே கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், தளம் வாரியாக நான்கு தளம் அவ்வளவும் பட்டு பல்வேறு பட்டு ரகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தரை தளத்தில் காட்டன் மற்றும் பேன்சி சேலைகள், காஞ்சி காட்டன், கோட்டா காட்டன், டசர், பனாரஸ், மகேஷ்வரி, சில்க், பெங்கால் சந்தேரி காட்டன், லினன் சேலைகள், சுடிதார் மெட்டி ரியல்கள் உள்ளன. முதல் தளத்தில் ரூ.1,000 முதல் ரூ.14 ஆயிரம் வரையி லான ஆர்ட் சில்க், பிளெண் டட்சிலக், தூய பட்டு சேலை கள், பனாரஸ், படோலா, இக்கட், மைசூர் சில்க், சந்தேரி, ஆர்கன்சா, லினன் சிலக் மற்றும் காதி சில்க் ரகங்கள் உள்ளன. இரண்டாம் தளத்தில் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான பியூர்பட்டு சேலைகள், பியூஷன் காஞ்சிவரம், பியூர் புரோக் கேட், டிஷ்யூ காஞ்சிவரம் மற்றும் பட்டு பாவாடைகள் உள்ளன. மூன்றாம் தளத்தில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான சுப முகூர்த்த கலெக்சன்கள், தாரங்கீளி பட்டு, பரிபூர்ணா பட்டு, பட்டு சட்டைகள், பட்டு வேஷ்டிகள் மற்றும் பேன்சி பிளவுஸ் மெட்டீரியல்கள் உள்ளன. சொந்த தறியில் நெய்யப்பட்ட தரமான காஞ்சி பட்டு ரகங்களை வழங்கி வரும் இந்நிறுவனத்தின் புதிய திறப்பு விழாவிற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



