கொள்முதல் விலையை ரூ.44என உடனே வழங்காவிட்டால் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவிப்பு

Aug 21, 2026 - 17:44
 4
கொள்முதல் விலையை ரூ.44என உடனே வழங்காவிட்டால் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவிப்பு

கொள்முதல் விலையை ரூ.44 என உடனே உயர்த்தி வழங்காவிட்டால்

ஆகஸ்ட்.24 முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவிப்பு 

திருச்சி

பால் கொள்முதல் விலையை ரூ.44 என உயர்த்தி வழங்காவிட்டால், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவி னுக்கு பால் வழங்க மாட்டோம் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர் ‌. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அதன் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சி ஆவின் கொள்முதல் நிலையத்தின் முன் நேற்று திரண்டு செய்தியாளர்களிடம் பேசும் போது :- பால் கொள்முதல் விலை 3ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் அதில், ஒரு ரூபாய் கொள்முதல் விலை ஆகம் 2 ரூபாய் ஊக்கத்தொகை யாகவும் வழங்கப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் கொள்முதல் விலையாக பால் லிட்டருக்கு ரூ.44 என அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது கொள்முதல் விலையை ஒரு ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்கி யிருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதுவும் கொள்முதல் நிலையங்களில் கொழுப்பு சத்து அளவு 4.2, சாலிட் நோ பேட் 8.2என பாலின் தரம் இருந்தால் மட்டுமே லிட்டருக்கு ரூ 41 என்ற தொகை கிடைக்கும். கால்நடை தீவனங்கள் அனைத்தும் ரூ.500 வரை விலை உயர்ந்துள்ளபோதும், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த அரசு முன்வரவில்லை ஏற்கனவே அரசுக்கு இது குறித்து கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு ஒரு லிட்டர் ரூ.45 வழங்கப்படுகிறது. எனினும் தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்காமல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வருகிறோம். ஆனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் இருந்தால், நாங்களும் தனியார் நிறுவனத்துக்கு பால் வழங்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே ஆவின் நிறுவனத்துக்கு வழங்கும் பாலுக்கு லிட்டருக்கு ரூ 44 என விலையை உயர்த்தி தந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கும், அரசு இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெ டுக்கவில்லை என்றால், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்க மாட்டோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0