திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதம்

Aug 5, 2026 - 13:37
 10
திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதம்

திருச்சியில்டாஸ்மாக்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

திருச்சி

 டாஸ்மாக் பணியாளர்கள், விற்பனையாளர்கள் திருச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், காலமுறை ஊதியம் வழங்கவும் நடப்பு சட்டபேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.டாஸ்மாக்கில் பணியாற்றி உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ,போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைத்து மதுக் கடைகளையும் மூடி டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசின் பிற துறைகளில் பணியமர்த்த வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் செளமிய மூர்த்தி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சார்ந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஆர். எம். ராமஜெயம், என்.வி. கணேஷ், உதயசங்கர், சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கவேல் அனைவரையும் வரவேற்றார் முடிவில் நெல்சன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0