திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகசார்பில்ஸ்ரீரங்கம்,திருவானைக்காவல் பகுதியில் மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்

Jan 29, 2026 - 13:42
 35

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்கோவில் பகுதியில், 'விடியா ஆட்சி உங்க வீட்டு பில்லே சாட்சி' என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தை முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மு.பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர்கள் எஸ். வளர்மதி, ஆர். மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்களிடையே விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை எடுத்து கூறி, அதனை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு, “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், அதிமுக ஆட்சிக் காலத்தையும்; தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் பனிஸ்மென்ட் பில்லை அதிமுக கனெக்ட் செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் .இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமண்ட் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0