திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் திருச்சி சேவா சங்கம் பள்ளி அருகில் உள்ள நேரு சிலை, மத்திய பேருந்து நிலையதில் உள்ள காமராஜர் சிலை, ஜங்ஷன் அருகில் உள்ள ராஜிவ்காந்தி சிலை, ஜென்னி பிளாசா அடைக்கலராஜ் சிலை, தலைமை தபால் நிலையம் காந்தி சிலை, அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, புத்தூர் இந்திரா காந்தி சிலை, சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் உள்ள காந்தி சிலை, சிங்கார தோப்பு பகுதியில் உள்ள தியாகி அருணாச்சலம் சிலை, அருணாச்சலம் மன்றம் காமராஜர் சிலை, அருணாச்சலம் மன்றம் அருகில் உள்ள காந்தி சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி பதவி ஏற்றுக்கொண்டார். இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட தலைவர் கே. ஆர். ஆர். ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாவட்ட பொருளாளர் முரளி, முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஷீலா செலஸ், மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், வல்லபாய் பட்டேல், ஷேக் தாவுத், கருப்பையா, அன்பு ஆறுமுகம், பாலு, கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மார்க்கெட் பகதூர்ஷா, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், புத்தூர் மலர் வெங்கடேஷ், வரகனேரி இஸ்மாயில், ஏர்போர்ட் கனகராஜ், ஐஎன்டியுசி நிர்வாகிகள் மதன்குமார், ஆனந்த், டேவிஸ், பிரபு, அணித்தலைவர்கள் கலைப்பிரிவு அருள், சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஜோன்ஸ், திருவானைக்கோவில் விச்சு,ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், மகிளா காங்கிரஸ் அஞ்சு, இந்திரா தோழி மாரீஸ்வரி, அமைப்புசாரா மகேந்திரன்,எஸ்சி பிரிவு கலியபெருமாள்,சோபியா, ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், விவசாய பிரிவு அண்ணாதுரை, மாணவர் காங்கிரஸ் நரேன், ஐடி பிரிவு லோகேஷ், சையது இப்ராஹிம், மூர்த்தி, பண்ணீர் செல்வம், தமிழ்அழகன், கண்ணன், யாசர், மைக்கெல் ராஜ், தியாகராஜன், கோபால், வடிவேல், சண்முகம், கார்த்தி, புனிதா, கேப்டன், பெரியசாமி, ரமேஷ், ஆரிஃப், ரமேஷ் குமார், நடராஜன், செபாஸ்தியர், மதி, விவேக், மணிமொழி, பூபதி, யோகநாதன், மகேஷ், கண்ணன், மணி, சரவணன், கண்ணன், அனந்த பத்பநாபன், லட்சுமணன், மணி, சுப்புராஜ், ஷரீப், அண்ணாதுரை, ஜஹிர் உசேன், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.நிகழ்வில்நிர்வாகிகளுடன் உரையாற்றிய மாவட்ட தலைவர் புதிய பொறுப்புகள் பெற விரும்பும் நிர்வாகிகள் விண்ணப்ப மனுக்களை தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் காலை முதல் மாலைவரை பெற்றுக்கொள்ளலாம். காங்கிரஸ் பேரியக்கத்திற்க்காக கடினமாக உழைத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே புதிய பதவிகள் வழங்கப்படும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0