திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு அரபிக் குளத்தெருவிலுள்ள நூலகத்தை குப்பை கிடங்காக மாற்ற எதிர்ப்பு பொதுமக்கள் ஆவேசம்
திருச்சி மாநகராட்சி 14வது வார்டு, அரபிகுளத் தெருவிலுள்ள நூலகத்தை குப்பை கிடங்காக மாற்ற எதிர்ப்பு பொதுமக்கள் ஆவேசம்
திருச்சி
திருச்சி மாநகராட்சி 14வது வார்டு, அரபிகுள்ள தெருவில் அமைந்துள்ள படிப்பகத்தை மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் ஆய்வு செய்து, அந்த இடத்தை குப்பைக் கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தை, பொதுமக்களின் கருத்துகளையும், மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளையும் பெறாமல் தன்னிச்சையாக குப்பைக் கிடங்காக மாற்ற முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற முடிவு அப்பகுதி மக்களின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கும். மேலும், பொதுமக்களிடையே அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.மாமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், மாநகராட்சி ஆணையர் தன்னிச்சையாக செயல்படுவது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. எனவே, இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற்று, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் மாநகராட்சி ஆணையரின் இந்த போக்கிற்கு எங்களது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்று அப்பகுதி பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0