தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்கள் விரும்பி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

Jul 20, 2026 - 17:54
 144
தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்கள் விரும்பி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்கள் விரும்பி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி!

திருச்சி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத இடங்களில் பாஜக மற்ற கட்சிகளை உடைத்து ஆட்சியில் அமர்கிறார்கள்.எனவேதமிழ்நாட்டில் இது போன்று நடந்துள்ளது,இது ஒன்றும் புதிது கிடையாது.தேர்தல் கூட்டணிகள் மாறியவுடன்அரசியல் கட்சிகள்ஒருவருக்கொருவர்திட்டிக்கொள்வதுஅநாவசியமானது.இதனால் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும்கிடைக்கப்போவதில்லை.தமிழகத்தில்திமுகஆட்சிவேண்டாம் என்றுதான் மக்கள் விரும்பி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதற்குப் பிறகு திமுக ஆட்சி குறித்து நான்தனியாக எந்தச் சான்றிதழும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டெல்லியில்போராட்டம்நடத்தியவர்கள்மீதுகாவல்துறைதடியடிநடத்தியுள்ளதுவருத்தமளிக்கிறது.ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரசுகள்ஜனநாயகமுறையில்தான் எதிர்கொள்ளவேண்டும்.அதேபோல், அரசியல் விமர்சனங்களை விமர்சன ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும்என்பதுதான்என்னுடைய நிலைப்பாடு,ஆனால்,அந்தவிமர்சனங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்கவேண்டும். யாரையுமே கைது செய்யக் கூடாது என்றுசொன்னால்,நாட்டில்யாராலும் ஆட்சியை நடத்த முடியாது. யார் என்ன சொன்னாலும் சகித்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதில்லை.சட்டம்ஒழுங்குசார்ந்த நடவடிக்கைகளைஅந்தந்தச்சம்பவங்களின்பின்னணியைப்பொறுத்தே நாம்மதிப்பிடமுடியும்.காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யாரும் சென்றால் அதனை யாரும் அணை போட்டு தடுக்க முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான லிரிக்ஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், முன்னாள்மாமன்றஉறுப்பினருமான எல்.ரெக்ஸ், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் முரளி,மகளிர் அணிசெயலாளர்அபிநயாரகுநாதன்,அஞ்சு,ஷீலாசெலஸ்,கோட்டத்தலைவர்கள்ராஜாடேனியல்ராய்,பிரியங்காபட்டேல்,மலர்வெங்கடேஷ், மனிதஉரிமைதுறைஎஸ்.ஆர்.ஆறுமுகம், அமைப்பு சாரா மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0