புதுச்சேரி, உப்பளம் தொகுதி பொதுப்பணி துறை பணிகள் குறித்து செயற்பொறியாளர் - அனிபால் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை

Jan 22, 2026 - 16:44
 14
புதுச்சேரி, உப்பளம் தொகுதி பொதுப்பணி துறை பணிகள் குறித்து  செயற்பொறியாளர் - அனிபால் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை

புதுச்சேரி, உப்பளம் தொகுதி பொதுப்பணி துறை பணிகள் குறித்து செயற்பொறியாளர் - அனிபால் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை

புதுச்சேரி, உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும்மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுப்பணி துறை பணிகள் குறித்து, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, பொதுப்பணி துறைசெயற்பொறியாளர்பத்ராவச்சலம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.இந்நிகழ்வில் புனித சவேரியார்ஆலயம்எதிரில்சேதமடைந்து 20 அடி ஆழத்தில் உள்ள பாதாள வடிகால் குழாய்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும், பாதாளவடிகால் கழிவு அலுவலகத்தில் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிணறுஇதுவரைபயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளதால், அதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். மேலும், 52 கோடி ரூபாய் செலவில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட புல்வார் பகுதிகள் முழுவதும் பாதாள வடிகால் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அந்த பணிகளை தாமதமின்றி விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என துறை அதிகாரிகளிடம்கேட்டுக்கொண்டார்.இந்த சந்திப்பின்போது, செங்கேனி, ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0