தற்காலிக தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தல்

Jan 22, 2026 - 16:29
 46

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் எஹியா பாஷா, மாநில பொதுச் செயலாளர் முகமது ஜாபர், மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், அதன் செய்தி தொடர்பாளர் நவாஸ் கான் உள்ளிட்டோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மாணவர்கள் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது அதில் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி அவர்களின் மருத்துவக் கனவை பறிக்கின்ற நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் தேசிய கல்விக் கொள்கை கூறுகளை மறைமுகமாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை தடுக்க வேண்டும். தற்காலிக தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்தில் யுனானி மருத்துவப் படிப்பிற்கான அரசு கல்வித்துறைகளை அதிகப்படுத்த வேண்டும். யுனானி மருத்துவ ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வக்பு போர்டு கீழ் பயன்பாடு இல்லாமல் இருக்கும் வக்பு நிலங்களில் சிறுபான்மையினருக்கான பள்ளி கல்லூரிகளை நிறுவ வேண்டும். தமிழ்நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் நிகழாமல் இருக்க இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான தனிச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்து நிறைவேற்றி தருமாறுகேட்டுக்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0