திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது , திருச்சியில் துரை.வைகோ பேட்டி
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மதிமுக போட்டியிடாது திருச்சியில் எம்பி துரை. வைகோ பேட்டி
திருச்சி,
திருச்சி, ஹைதராபாத் சாரளப் பள்ளியில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலை திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வரவேற்ற திருச்சி மக்களவை உறுப்பினர் துரை. வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: த.வெ.கவில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் புதியவர்கள் என்பதால் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து எதற்கெடுத்தாலும் விமர்சனம் என்கிற பெயரில் கொச்சைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆண்ட கட்சிகள் தங்கள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடியது போல கூறுகின்றனர். கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்த நிலையில் ஏழை குடும்ப பின்னணியை சேர்ந்த அவர்களுக்கு அரசு பணி வழங்குவதில் எந்த தவறும் இல்லை. இதில் தவறிழைத்தவர்கள் யார் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும். அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்ப்பது ஒரு விதம். ஆனால் நிர்வாகத்துக்காக ஒத்துப்போக வேண்டும். இதில் விஜய் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. இதற்கு உதாரணம் முன்மொழிக் கொள்கை. மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாமல் தமிழக அரசை நடத்த முடியாது. எனவே மத்திய அரசுடன் நிர்வாக ரீதியான மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். அசாம் மணிப்பூர் மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் முன்மொழிக் கொள்கை பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. மொழி திணிப்பு வேகமாக நடந்து வருகிறது. தற்போது உலகமயமாதலில் மூன்றாவது மொழி கற்றுக் கொள்வதில் தவறில்லை. முமமொழிக் கொள்கையால் ஆங்கிலம் போன்ற உலகம் மொழிகளை கற்க முடியாத சூழலை உருவாக்கி விட்டனர். பல மாநிலங்களில் இந்தி, சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக திணிக்கப்படுகிறது. மொழி பற்று இருக்க வேண்டும். ஆனால் மொழி வெறி இருக்கக் கூடாது. திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டுயிடுமா என்ற கேள்விக்கு போட்டியிடாது என்று கூறினார். பேடியின் போது துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் மெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், டி.டி.சி. சேரன், கவுன்சிலர் ஆபீஸ் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத், ஜங்ஷன் செல்லத்துரை, உள்ளிட்ட ஏராள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0