அறத்தமிழன் பேரியக்கத்தின் வளர்ச்சிக் குழுவின் மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் நடந்தது.
திருச்சியில் நடந்தது அறத்தமிழன் பேரியக்கத்தின் வளர்ச்சிக் குழுவின் மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி,
அறத்தமிழன் பேரியக்கத்தின் மாநில வளர்ச்சி கழுவின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு அரைத்தமிழன் பேரியக்கத்தின் கோட்பாடு கையேடுவை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் விஜய் சீத்தாராமன் வெளியிட்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.இதில் பொதுச் செயலாளர் பால் கிறிஸ்டியன், மாநில துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில வளர்ச்சிக்குழு செயலாளர் செல்வராஜ், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் அறிவுச் செல்வம், மாநில பொருளாளர், மாநில இளைஞர் அணிச் செயலாளர் தலைமகன், மாநில அமைப்பாளர் பாரி மன்னன், மாவட்ட உணவு மற்றும் ஆரம்ப சுகாதாரம் கோவன் புத்தூர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், ஐம்பேராயம் குழு மாநில செயலாளர் சத்தியசீலன் மாநில செயலாளர் சமூக நலம் கலிஸ்தராஜ், சிங்கை ராமு, சென்னை பசுமை ஞாலம் செயலாளர் குமார், அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் அருண், திருச்சி திருவெறும்பூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர்சண்முகம், கடலூர் மாவட்ட சரவணன், வணிகப் பரவை மாநில ஒருங்கிணைப்பாளர்பாரூக் உசேன், தகவல் தொழில்நுட்பம் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் அறத்தமிழன் ஆட்சியில் தமிழ் மண்ணில் வாழும் அனைவருக்கும் தரமான, சுகாதாரமான உணவு என்னும் நிலை உறுதி செய்யப்படும், அனைத்து குடும்பத்திற்கும் வாடகை இல்லாத அரசின் உரிமை வீடுகள் உறுதி செய்யப்படும், உலக தரத்திலான கட்டணம் இல்லாத அனைவருக்கும் சமமான கல்வியும், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி பருவம் வரை தமிழ் கட்டாய பாடமாகவும் இருக்கும் தனியார் பள்ளிகள் அரசுடைமையாக்கப்படும். அரசு மருத்துவமனைகள் உலக தரத்தில் தரம் உயர்த்தப்படும், நிர்வாக குறைபாடுகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்திலும் தமிழ் என்ற அடிப்படையில் பெயர் பலகை தொடங்கி பயன்படுத்தப்படும், அத்தனை அரசு மற்றும் அரசு சாரா அலுவலக செயல் முறையிலும் தமிழ் கட்டாயமாக்கப்படும். உண்மையான சமரசமற்ற பூரண மதுவிலக்கு மற்றும் அனைத்து விதத்திலான போதை ஒழிப்பு கடும் சட்டங்களின்மூலம்நடைமுறைப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0