ரியல் எஸ்டேட் துறையில் சதுர அடிக்கு முதலமைச்சர் நிதி என்று வசூலிக்கப்பட்ட ரூ..40 கட்டணத்தை ரத்து செய்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.,
ரியல்எஸ்டேட்துறையில்சதுரஅடிக்கு முதலமைச்சர் நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட ரூ. 40 கட்டணத்தை ரத்து செய்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குநன்றி தெரிவித்து தீர்மானம்
திருச்சி,
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷனின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில சங்க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் & பொருளாளர் மலேசியா ஆர். மணி, மாநில செயலாளர் ஆர். ஸ்டாலின், மற்றும் மாநில கூடுதல் செயலாளர் டி.பக்கிரிசாமிஆகியோர்முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில, மாவட்ட, மகளிர் அணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்: சங்க விரிவாக்கம்: தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்றும், இதுவரைசங்கக்கிளைகள் இல்லாதமீதமுள்ளமாவட்டங்களிலும் புதிய கிளைகளைத் தொடங்கி, அமைப்பை வலுப்படுத்த மாநிலம் தழுவியசுற்றுப்பயணம்மேற்கொள்வது,ரியல் எஸ்டேட் துறையில் உள்ளஅனைவரும்இந்தஅமைப்பில் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக அரசுக்கு பாராட்டு: தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, ரியல் எஸ்டேட் துறையில்சதுரடிக்கு முதலமைச்சர் நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட ரூ. 40 கட்டணத்தை ரத்து செய்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், DTCP மற்றும் RERA அனுமதிகளை எளிமையாக்கியது, பத்திரப்பதிவுத் துறையில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்தது ஆகியவற்றிற்கு சங்கத்தின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 28-6-26.. அன்று தலைமைச் செயலகத்தில் நடந்தமாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முதல்வர் குறிப்பிட்டது போல, நிலத் தகராறுகளால்ஏற்படும்பாதிப்புகளைத் தவிர்க்க:நில விவகாரங்கள் தொடர்பான வழக்குகளுக்குத் தீர்வு காணநீதிமன்றங்களில்மாதந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். ஒரேஇடத்திற்குபலபோலிபத்திரங்கள்இருப்பதைகண்டறிந்துமுறைகேடாகப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு அதிகாரிகள் குழு அமைத்து உண்மையானஉரிமையாளர்களைக் கண்டறிய வேண்டும். நில அளவை மற்றும் பட்டா: நில அளவையின் போது (Surveyor) அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். தன்னிச்சையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவதையும் தடுக்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். நில முகவர்கள் நலன் கருதி ரியல் எஸ்டேட் முகவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நில முகவர்களுக்கு, எளிய முறையில் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷன் கட்டமைப்பு மாற்றம் இனிவரும் காலங்களில், 1 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் நடந்தால் 2.% கமிஷனும், 1 கோடி ரூபாய்க்குக் கீழ் வணிகம் நடந்தால் 3.% கமிஷனும் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் நேரில் முறையிடவும், கோரிக்கை மனுவை அளிக்கவும் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0