திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த கதிரவன் எம்.எல்.ஏ.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தகதிரவன் எம்.எல்.ஏ
திருச்சி,
நடைபெற்ற2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளான 85 சீதேவிமங்கலம் , பெரகம்பி,வாழையூர்,சிறுகனூர், திருப்பட்டூர், எதுமலை,வலையூர், ஓமாந்தூர், சிறுகுடி, சிறுப்பத்தூர்,சனமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒவ்வொரு கிராமத்திலும், பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தது டன் அவருக்கு தங்களது சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.அப்போது கிராம மக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான தேவைகளை கேட்டு அறிந்த அவர் அவற்றை உரிய துறைகளில் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், இளைஞர் மற்றும் மகளிர் அணியினர்,ஒன்றியச் செயலாளர்கள், மற்றும் கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0