திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27 வது பட்டமளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்பு!
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27 து பட்டமளிப்பு விழா
திருச்சி
திருச்சிமாவட்டம்திருவானைக்கோவில்அருகிலுள்ளஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன்கல்லூரியின்27வது பட்டமளிப்பு விழாஸ்ரீ பாதுகா அரங்கில்நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஸ்ரீ ஆர். வெங்கடேஷ், சி. ஏ. நிர்வாகக்குழுவினர்கள்முதல்வர் முனைவர் எம். பிச்சைமணி, மூத்த துணை முதல்வர் முனைவர் ஜி ஜோதி, துணை முதல்வர்கள் முனைவர் ஆர் கிருஷ்ணன், முனைவர் உபேந்திரன், புலமுதன்மயர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் தகவல் தொடர்பு அலுவலர் மோகன், மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன், தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறை எஸ்.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களைவழங்கிசிறப்புரையாற்றினார். இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் சிறப்புரையில் ஒருவருடைய விடாமுயற்சியும் உடல் உழைப்பும் அதற்கேற்ற பலனை நிச்சயம் தேடித் தரும் என்பதை திருக்குறள் வழியில் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். கல்வி முடித்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலையிலும் சோர்வடையாமல் தொடர்ந்து புயல வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் பேசும்போது:- தன் பிள்ளை அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த சான்றோன் என்று பிறர் சொல்ல கேட்கும் போது ஒரு தாய் அவனை பெற்றெடுத்த போது, அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரு மகிழ்ச்சி அடைவாள் என்று திருக்குறளைச் சான்று சுட்டி காட்டி கூறினார். இந்நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் வி ராஜேஷ் கண்ணா மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகண்டு சிறப்பித்தனர். விழாவில் இளநிலை முதல் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் வரை பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற 12 30 மாணவர்கள் பட்டம் பெற்றனர். குறிப்பாக தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத் தரவரிசை பெற்ற மாணவர்களைச் சிறப்பிக்கும் வகையில் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0