கட்டுமான பொறியாளர்கள் சங்கம் 2026-27ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா

Jun 16, 2026 - 17:14
Jun 16, 2026 - 17:29
 61
கட்டுமான பொறியாளர்கள் சங்கம் 2026-27ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா

கட்டுமான பொறியாளர்கள் சங்க 2026-27ஆண்டு புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா

திருச்சி, 

கட்டுமான பொறியாளர்கள் சங்கம் திருச்சிராப்பள்ளி 2026- 27 ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. சங்கத் தலைவராக பொறியாளர் பி. ஏ. விஸ்வநாத், செயலாளராக எம். இருதயராஜ், பொருளாளராக பி.ரவிக்குமார், துணைத் தலைவராக ஆர். ஜெயராம், இணைச் செயலாளராக பி. கோகுல்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ஜி. பாலாஜி ஜி. கருணன், ஏ.லட்சுமணகுமார், ஜி. ராமச்சந்திரன், டி, ரமேஷ், என். சங்கர், எம். செந்தில்நாதன், ஏ. எம். ஷேக் அப்துல்லா, ஜி. சிவக்குமார், எம் .சிவக்குமார், எஸ். விக்னேஷ் குமார்,ஏ.விமல்ராஜ்ஆகியோர்தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய பொறுப்பாளர்களுக்கான பணியேற்பு விழா திருச்சி சென்னை பைபாஸ் ரோடு, சஞ்சீவி நகர் அருகில் உள்ள சங்கீதாஸ் ஹோட்டல் சக்ரா ஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்டுமான பொறியாளர்கள் சங்க மாநில கூட்டமைப்பின் தலைவர் டி. புருஷோத்தமன் கலந்து கொண்டு சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அனைவரையும் உறுதிமொழி வாசிக்க வைத்து பணியேற்பு செய்து வைத்தார். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் உடனடி முன்னாள் தலைவர் எஸ். எம். கே. சுந்தரேசன் வரவேற்றார். விழாவில் தேசியத் துணைத் தலைவர் திருசங்கு, கூட்டமைப்பின் மாநில செயலாளர் எஸ் அருள், மாநில பொருளாளர் வி.கர்ணன், முன்னாள் மாநில தலைவர் பி.முரளிகுமார்,முன்னாள் மாநில தலைவர் வி. என். ஆர். நாகராஜன், மண்டல செயலாளர் ராஜதுரை கௌரவத் தலைவர் எம் செல்வராஜ் முன்னாள்தலைவர்கள் கே. சுகுமார், பி. என். கதிரவன், எஸ். சோமசுந்தரம், எம். ரவிச்சந்திரன், கே. ராமகணேசன், இ. தென்னரசு, எஸ். கார்த்திக், வி சிவகுமார்,எஸ்.சுரேஷ்குமார்,கிட்டார்துணைத்தலைவர்வி.கோபிநாதன்,சி.ஐ.ஐ.திருச்சிமண்டலதுணைத் தலைவர்ஜெயம்பில்டர்ஸ்எஸ்.ஆனந்த், உள்பட பலர் கலந்து கொண்டு புதிய பணியேற்பாளர்களுக்கு தங்களதுவாழ்த்துக்களைதெரிவித்தனர். விழாவில் பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளை கௌரவிக்கப்பட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0