கர்மா குளோபல் ஸ்கில்ஸ் ஏ.ஐ.நிறுவனத்துடன் திருச்சி ஸ்ரீஆதிசங்கரர் கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Jun 5, 2026 - 17:56
 102
கர்மா குளோபல் ஸ்கில்ஸ் ஏ.ஐ.நிறுவனத்துடன் திருச்சி  ஸ்ரீஆதிசங்கரர் கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெங்களூரு கர்மாகுளோபல்ஸ்கில்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துடன் திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமமும்புரிந்துணர்வு ஒப்பந்தம் திருச்சி, ஜூன்.06- திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமமும் பெங்களூருகர்மாகுளோபல்ஸ்கில்ஸ் ஏ.ஐ. நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீ ஆதிசங்கர கல்வி குழும சேர்மன் செந்தில்நாதன் நிருபர்களிடையே பேசும் போது:- பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கர்மா குளோபல் ஸ்கில்ஸ்ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) நிறுவனமும் திருச்சி ஸ்ரீ ஆதிசங்கர கல்வி குழுமமும் இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் பணியாளர்களின் திறனை மேம்படுத்த புரிந்த உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் வருங்காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. இதனால் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவியும் மேலும் தகுதியான இளைஞர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது சேர்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேலை வாய்ப்புக்கு ஏற்ப எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை கர்மா குளோபல் ஸ்கில்ஸ் ஏ.ஐ. நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதில் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் தொழில்நுட்பம் ஆகிய மூன்றையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து இளைஞர்களுக்கு நாளையவாய்ப்புகளுக்குத்தயாராகஇருக்கும்உலகளாவியதிறன்மிக்கபணியாளர்களைஉருவாக்குவதேஎங்கள்இலக்காகஉள்ளது.அதற்காகஸ்ரீஆதிசங்கரர்கல்விக்குழுமத்துடன்கைகோர்த்துள்ளதுஎனகூறினார். பேட்டியின்போதுஆதிசங்கரர்கல்விகுழுமத்துணைத் தலைவர் ஆகாஷ் பாலாஜி,கர்மாகுளோபல்ஸ்கில்ஸ்ஏ. ஐ. நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். .

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0