சட்டப்பேரவை துணைத் தலைவரை கண்டித்து துறையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Nov 13, 2026 - 23:14
 3
சட்டப்பேரவை துணைத் தலைவரை கண்டித்து துறையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சட்டப்பேரவை துணைத் தலைவரை கண்டித்து

 துறையூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

 திருச்சி,

திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. துறையூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி என். தியாகராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ செ.ஸ்டாலின் குமார், துறையூர் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி , ஒன்றியச் செயலாளர்கள் வீரபத்திரன், சரவணன், முத்து செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் காடுவெட்டி என்.தியாகராஜன் பேசியதாவது:-சட்டப்பேரவை துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்ட போது இந்த தொகுதி மக்கள் பெருமை பட்டனர். ஆனால் மக்களால் அவரை நெருங்கவோ அவரிடம் குறைகளை கூறவும் முடியவில்லை. இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த கார்த்திக் என்பவரை ரவிசங்கர் தாக்கியுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் துறையூர் மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன தவெக . ஆட்சிக்கு வந்த இந்த 6 மாதங்களில் இதுவும் செய்யாமல் திமுகவை திட்டிக்கண்டே இருக்கின்றனர்.தவெக ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு இல்லை.தவெகவுக்கு ஆட்சி செய்ய தகுதியில்லை என்று பேசினார். இந்நிலையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி மற்றும் 10 பெண்கள் உள்பட 137 பேர் மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0