சேவைக் கட்டணத்தை உயர்த்தியும் நலவாரியம் அமைக்கவும் வலியுறுத்தல் இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Oct 25, 2026 - 16:50
 53
சேவைக் கட்டணத்தை உயர்த்தியும் நலவாரியம் அமைக்கவும் வலியுறுத்தல் இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சேவைக் கட்டணத்தைஉயர்த்தியும்

நலவாரியம்அமைக்கவும்வலியுறுத்தல்

இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் 

திருச்சி,

 தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி அரங்கத்தில் சங்கத்தின் தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சேவியர் முன்னிலை வகித்தார். டிஜிட்டல் சேவா போர்ட்டலில் இ-சேவை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்குப் புதிய இ-சேவை அடையாள அட்டை வழங்கிட வேண்டும். கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் உள்ள சேவைக் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.150 ஆகவும், வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பக் கட்டணத்தை ரூ.250 ஆகவும், பட்டா விண்ணப்பக் கட்டணத்தை ரூ.350 ஆகவும் உயர்த்த வேண்டும். இ-சேவை மையங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும். இ-சேவை 2.0 மென்பொருள் வடிவமைப்பில் சங்கத்தின் நிபுணர் குழு வழங்கும் பரிந்துரைகளைப் பரிசீலிக்க வேண்டும். இ-சேவை மைய உரிமையாளர்களுக்குத் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். குடும்ப அட்டையில் புகைப்படம் மாற்றுதல், பெயர் திருத்தம் மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ்களில் திருத்தம் செய்வதற்கானவிண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கும் பணிகளைத் தகுதியான இ-சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி தொடர்பான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும்.கடந்த 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி, இணையவழியில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பொருளாளர் சரவணக்குமார், துணைத்தலைவர்தலைவர்எச்.மூர்த்திசெயலாளர்ஜே.சேவியர்,பொருளாளர் எல்.சரவணக்குமார், ,துணைத் தலைவர்கள் ஜே.ஜெயப்பிரகாஷ்,எம்.கோபிக்,ஜி.விஜயலட்சுமி,இணைச்செயலாளர்கள்டி.லோகநாதன்,எஸ்.சுரேஷ்,எஸ்.அருள்செல்வம்,மகளிர்ஒருங்கிணைப்பாளர்எஸ்.கரோலினாள் உள்ளிட்ட 359க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0