திருச்சி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆணையர் நே.பொன்மணி நேரில் ஆய்வு
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணி
ஆணையர் நே.பொன்மணி நேரில் ஆய்வு.
திருச்சி,
திருச்சி மாநகராட்சி 3ஆவது மண்டலம் 35ஆவது வாா்டு சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆணையர் கூறியதாவது :திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழைக்கு தொடங்கியுள்ளதால், டெங்கு மற்றும் பிற கொசுக்களால் பரவும் நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி 65 வார்டு முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீர், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதால், மாநகராட்சி மண்டலங்கள் முழுவதும் கண்காணிப்பை வலுப்படுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து ஒழிப்பதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 60 வீட்டுக் கொசுஒழிப்புகண்காணிப்பாளர்கள்(DBC)பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பருவமழை தொடங்கியதையடுத்து, தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்த ஒவ்வொரு மண்டலத்திலும் கூடுதலாக 20 டெங்கு தடுப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் விதமாக, டெங்கு புழு உருவாக ஏதுவான நீராதாரங்களை கண்டறிந்து அழிக்கவும், வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சியில் மொத்தம் 350 டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளா்கள் வீடு வீடாக சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தார்கள் சாலை பகுதிகள், பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது மீறி குப்பைகள் கொட்டுபவர்கள் மீது அபதாரம் விதிக்கப்படும். மேலும்,திருச்சி மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி கேட்டுக் கொண்டுள்ளார் .
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0