கோவில்களில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும் இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

Sep 29, 2026 - 20:03
 78
கோவில்களில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும் இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க  தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

கோவில்களில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும்

 இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் 

திருச்சி ,

 இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத் தலைவரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மணிவில் கூறி இருப்பதாவது : தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களின் அலுவலகங்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ளிட்ட முதல் நிலை கோவில்களிலும், உதவி ஆணையர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிற திருக்கோயில் அலுவலகங்களிலும் சில ஊழியர்கள் 20முதல் 30 ஆண்டுகள் வரை ஒரே கோவிலிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றுவதால் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை குறைவதற்கும், முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உருவாகுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே திருக்கோயில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நிர்வாக திறன் உறுதி செய்யும் வகையில் பல ஆண்டுகளாக ஒரே கோவிலில் பணியாற்றி வரும் ஊழியர்களை விதிமுறைகளின்படி பணியிட மாற்றம் செய்ய வேண்டும். கோவில் நிர்வாகத்திலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும். வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும். நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0