கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி மாவட்ட கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

Sep 27, 2026 - 19:44
Sep 27, 2026 - 22:03
 65
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி மாவட்ட கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தநடவடிக்கை வேண்டும்

திருச்சி மாவட்டகட்டிடதொழிலாளர் பஞ்சாயத்து சங்கபொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் 

திருச்சி,

திருச்சி மாவட்ட கட்டிடதொழிலாளர் பஞ்சாயத்து சங்கம், ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் இணைந்து கட்டிட தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா, கட்டிட தொழிலாளர் சங்க பொதுக்குழு என முப்பெரும் விழா திருச்சி கல்லுக்குழி அருகிலுள்ள சிவிஎஸ் மகாலில் நடந்தது. கட்டிட தொழிலாளர் சங்க மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட தலைவருமான டி.கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் போஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிமளநாதன், துணை செயலாளர் நாராயணசாமி, அமைப்பு செயலாளர் திருமுருகன், பொருளாளர் மன்சூர்அலி, அவை தலைவர் விஸ்வலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தேசிய அமைப்பு சாரா மற்றும் இடம்பெயரும் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் கீதா அம்மையார், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் அருள்தாஸ், ரோட்டரி மாவட்டம் 3000ன் கவர்னர் சுப்பிரமணி, கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவிகள் வழங்கும் குழு தலைவர் மணி, செயலாளர் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் வீரேஸ்வரி ஜெயபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் கீதா அம்மையாருக்கு புரட்சி தாய், அருள்தாசுக்கு இளைஞர்களின் பாதுகாவலர், கருணாநிதிக்கு தொழிலாளர்களின் போராளி விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் மத்திய அரசின் 44 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற்று தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துக்கு 2 சதவீதம் லெவி அமல்படுத்த வேண்டும். மணல், கம்பி, செங்கல், பைப், எம்.சாண்ட் மற்றும் இதர பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதுடன் ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும். தொழிலாளர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதை தவிர்த்து, தொழிற்சங்கங்களின் மூலமாகவே பதிவை எளிமைப்படுத்த வேண்டும், மாவட்டந்தோறும் குறைதீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0