தேசியக் கல்லூரியில் புவியியல் துறை கழக கூட்டம்

Sep 23, 2026 - 17:04
 4
தேசியக் கல்லூரியில் புவியியல் துறை கழக கூட்டம்

தேசிய கல்லூரியில் புவியியல் துறை கழக கூட்டம் 

திருச்சி,

திருச்சி தேசிய கல்லூரி புவியியல் துறை சார்பில் புவியியல் கழக கூட்டம் கல்லூரி கேலரி அரங்கில் நடந்தது. 'பெட்ரோலிய ஆய்வில் புவியியலாளரின் பங்கு' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் டி.வி.சுந்தர் தலைமை வகித்தார். புவியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சே. வெங்கட்ரமணன் வரவேற்றார். துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் நா. ஜவஹர்ராஜ் தொடக்க உரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த ரூட்லெட்ஜ் தனியார் நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை வாயு கண்காணிப்பு பொறியியலாளர் குணசேகர பாண்டியன் பங்கேற்று, பெட்ரோலிய ஆய்வில் புவியியலாளர்களின் பங்கு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் கவுரவிக்கப்பட்டார். புவியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி. பயன்பாட்டு புவியியல் மாணவர் சர்வேஷ் கண்ணா நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0