முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரி வருகிற 24 ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுயிட்டு போராட்டம் நடத்த முடிவு 20 விவசாய சங்கங்களின் கூட்டாக அறிவிப்பு

Sep 19, 2026 - 20:07
 109
முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரி வருகிற 24 ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுயிட்டு போராட்டம் நடத்த முடிவு 20 விவசாய சங்கங்களின் கூட்டாக அறிவிப்பு

முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரி

 வருகிற 24 ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

 20 விவசாய சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

திருச்சி,

தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்று 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50%விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஒரு லட்சத்திற்கு கீழ் விவசாய கடன் பெற்று இருப்பின் ரூபாய் 75 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும், ஒரு லட்சத்திற்கும் மேல் விவசாய கடன் பெற்று இருப்பின் ரூபாய் 25,000 விவசாய கடன் தள்ளுபடி என்றும், அறிவித்து 17 நிபந்தனங்களை விதித்து விவசாய கடன் வசூலில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காட்டும் மழை மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கை ஈடுபட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கையை வேடிக்கை பார்க்கும் மாநில அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். மேலும் தேர்தல் வாக்குறுதியின் படி உடனடியாக விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாநில அரசு விவசாயிகளை ஒடுக்கும் விதமாகவும் நசுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. ஆகையால் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 24ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தை 20 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பேச்சு வார்த்தை நடத்தும் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பிட்ட விவசாய சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. ஆகையால் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்து உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பேட்டியின் போது செல்லமுத்து தனபாலன் அங்கமுத்து உள்ளிட்ட 20 விவசாய சங்க தலைவர்கள் உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0