திருச்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் 69 வது நினைவு நாள் விழா கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா செளகத் தலைமையில் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
தியாகி ஐயா இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு நாள் விழா
கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமையில் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை
திருச்சி,
சுதந்திர போராட்ட தியாகி ஐயாஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான இம்மானுவேல் சேகரன் 69வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெரு அருகில் தவெக திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அவரது திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழக நிறுவனத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய் உத்தரவின்படி, கழகப் அமைச்சர்கள்என்.ஆனந்த், ரமேஷ் அறிவுறுத்தல்படி, தெய்வத்திருவாளர்கள் வி.எல்.ஶ்ரீனிவாசன் & உறந்தை கலை ஆசியுடன் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமையில் மற்றும் வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர் சிந்தை எஸ்.எம். சேட்டு ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவானந்தம், பகுதிச் செயலாளர்கள் கௌதம், ஆர்.சூர்யா, சதீஷ், மலைக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் கணேஷ், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்,13அ-வது வார்டு செயலாளர் ஹரிகரன்,சிந்தாமணி பகுதி பொருளாளர் எஸ்.எம்.விஜய், செயற்குழு உறுப்பினர் ரமேஷ் ,12-வது வட்டச் செயலாளர் பிரதாப், மற்றும் அனைத்து நிலை கழகப் பகுதி, வட்ட, சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0