திருச்சியில் நூல் வெளியீட்டு விழா முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக் கொண்டார்

Aug 25, 2026 - 08:13
 93
திருச்சியில் நூல் வெளியீட்டு விழா முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக் கொண்டார்

திருச்சியில் நூல் வெளியீட்டு விழா""

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்

திருச்சி,

 ''வாய்மை எனப்படுவது யாதெனின்'' என்ற தலைப்பிலான பத்மஸ்ரீ எஸ். தாமோதரனின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டல் நடந்தது. நூலை லயன் டேட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பி.பொன்னுதுரை வெளியிட அதை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் பேசும்போது:- சுகாதாரம் என்பது அரசியல் சுதந்திரத்தைப் போலவே முக்கியமானது என மகாத்மா காந்தி கூறியுள்ளார். இருப்பினும் முன்னர் நமதுசகோதர,சகோதரிகள் பலர் தூய்மையான குடிநீர், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்தனர். இந்த இன்னல்களைச் சரி செய்ய தாமோதரனின் கிராமாலயா போன்ற சமூக அமைப்புகள் உதவியுள்ளன. அதன் விளைவாக, திருச்சி மாவட்டம் தாண்டவம் பட்டி ஊராட்சியானது 2003 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் சிறந்த மலம் கழித்தல் அல்லாத கிராமமாக மாறியது. இது நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்ததன் மூலம் 2022 ஆம் ஆண்டில் தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. சமுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உயர்பதவி வருமானம் தேவையில்லை. வருங்காலத்தில் நாம் எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை உலகம் நினைவில் கொள்வதில்லை, மாறாக, நாம் சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள் தங்களது இளமை, அறிவுத்திறன், சிந்தனையின் ஒரு பகுதியை அர்ப்பணியுங்கள். யாராக இருந்தாலும் சரி, நீங்கள் பிறந்த மண்ணை மறவாதீர், இளைய தலைமுறையினர் உங்களைச் சுற்றி உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கு தீர்வு காண்பதை லட்சியமாகக் கொள்ளுங்கள் . தாமோதரனின் சுயசரிதை காலத்தால் அழியாத உண்மைக்கு வாழும் சான்றாக விளங்குகிறது. மனிதநேயம், உறுதியான நம்பிக்கையுடன், மக்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் ஆற்றலைக் கொண்டது. தாமோதரனைப் போலவே நானும் எனது சுயசரிதையை எழுதியுள்ளேன். அது நமது பிரதமரால் வெளியிடப்பட்டது. அந்நூல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அதை தமிழிலும் வெளியிட உள்ளேன் என்றார். இன் நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம். விக்னேஷ், முன்னாள் அமைச்சர் என். ஆர். சிவபதி கிராமாலயா இயக்குனர் (மாதவிடாய், சுகாதாரம்) ப்ரீத்தி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் இளங்கோவன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0