ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சார்பில் விவசாயிகளுக்காக ஒரு நாள் பயிற்சி நடந்தது

Aug 14, 2026 - 08:24
 5
ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சார்பில் விவசாயிகளுக்காக ஒரு நாள் பயிற்சி நடந்தது

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சார்பில் விவசாயிகளுக்காக ஒரு நாள் பயிற்சி நடந்தது

திருச்சி 

 ரோட்டரி கிளப் ஆப் திருச்சி கோட்டை திட்டம் சார்பில், விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். யுபிஎல் நிறுவனத்தின் மாநில தலைமை ராஜசேகரன் மற்றும் குழுவினர் விவசாயிகளுக்கு உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், அதிக மகசூல் பெறும் நவீன விவசாய முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நிறைவு விழாவில் கலந்து கொண்டு, விவசாயிகளின் நலன், பயிர்க் கடன் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றி, விவசாயிகளுக்கு மிகுந்த ஊக்கமளித்தார். மேலும்ரோட்டரி கிளப் ஆப் திருச்சி கோட்டை மற்றும் யுபிஎல் சார்பில், ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் ரூ.5,000 மதிப்புள்ள பயனுள்ள பரிசுப் பொருட்கள் மற்றும் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் காலை உணவு, மதிய உணவு, தேநீர் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய தலைவர் ரமேஷ் நடராஜன், துனை தலைவர் சின்னதுரை – Chairman, Farmer Project, Secretary ராமநாதன், சர்வீஸ் திட்ட இயக்குனர் கண்ணன், கருணாகரன், இணை தலைவர் நாகராஜன், Rtn. ராமகணேஷ் மற்றும் அனைத்து நண்பர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், யுபிஎல் குழுவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0