திருச்சி சந்தானம் வித்யாலயா மேல் பள்ளியில் முன்னாள் செயளர் வழக்கறிஞர் குஞ்சிதபாதம் நினைவு தினம்
சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் செயலர் வழக்கறிஞர் குஞ்சிதபாதம் நினைவு தினம்
திருச்சி
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில்(சிபிஎஸ்இ) எஸ். குஞ்சிதபாதம், சீனியர் அட்வகேட் மற்றும் முன்னாள் செயலர், வழக்கறிஞர் குஞ்சிதபாதம் நினைவு தினத்தை முன்னிட்டு இசைக்கச்சேரி நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் சந்திரமௌலி மற்றும் செயலர் முனைவர் மீனா ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், மற்றும் இயக்குனர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசைக்கச்சேரியை புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகர் அபிஷேக் ரகுராம் அவர்கள் வழங்கினார். இவருடன் வயலின் பாஸ்கர், மிருதங்கம் ஹரிகுமார் மற்றும் கடம் திரு. S.கிருஷ்ணஸ்வாமி ஆகியோர் இணைந்து வழங்கினர். பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன், வரவேற்புரை ஆற்றினார். அவர் தனதுரையில், இத்தினத்தில் குஞ்சிதபாதம் (சீனியர் அட்வகேட் & முன்னாள் செயலர்) அவர்களை நினைவு கூர்ந்து இந்நிகழ்ச்சியில் ஒன்றிணைவது அவரின் பெருமையை போற்றுவதற்காகவே என்றார். நம் கல்வி நிறுவனத்திற்கும் இசைக்கும் உரிய தொடர்பைப் பற்றிப் பகிர்ந்தார். பின்பு சிறப்பு விருந்தினரின் சிறப்புகளையும் அவரது இசைக்குடும்பம் மற்றும் இசைப் பயணம் பற்றிய சிறப்புகளை மகிழ்வோடு பகிர்ந்தார். இசை நிகழ்வில் கலந்து கொண்ட இசைத்துறை சார்ந்த ஒவ்வொருவரின் சிறப்புகளையும் பகிர்ந்து அவர்களை மகிழ்வோடு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் டீன் கணேஷ், முதல்வர் பத்மா சீனிவாசன், ஆபரேஷன் ஹெட் வித்யாலஷ்மி, அகாடமி ஹெட் ரவீந்திரநாத் குமார், துணை முதல்வர்கள் ரேகா மற்றும் ஸ்ரீபல்லவி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்கள், இசை ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சந்தானம் வித்யாலயா பள்ளியில் சங்கீதத்தில் சிறந்து விளங்கிய மாணவர்கள், மற்றும் கல்வி ஊக்குவிப்பாளர்கள் ஆகியோருக்கு சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் அபிஷேக் ரகுராம் அவர்கள் தனதுரையில், சங்கீதத்தில் குருவாக இருக்கும் அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு தனது இசையை ஆரம்பித்தார். அவர் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமாளின் அருளைப் பெற வேண்டி முதல் பாடலாக ஹம்சத்வனி ராகத்தில் வாதாபிகணபதிம் பஜேகம், ஹிந்தோளம் ராகத்தில் மா ரமணன்,உமா ரமணன், கல்யாணி ராகத்தில் உன்னை அல்லால் வேறு கதி இல்லை போன்ற பல பாடல்களைப் பாடி இசை மழையில் மகிழ்வித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0