தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு "இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுப்பதற்கு தடையாக இருப்பது நவீன வாழ்க்கை முறையா-? அல்லது விழிப்புணர்வு இல்லாமையா-? சிறப்பு பட்டிமன்றம்
தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு
“இன்றையகாலகட்டத்தில்தாய்ப்பால்கொடுப்பதற்குதடையாகஇருப்பது -
நவீன வாழ்க்கை முறையா? அல்லதுவிழிப்புணர்வுஇல்லாமையா?” சிறப்புபட்டிமன்றம்
திருச்சி,
உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நலக் குழுமம் (IAP) - திருச்சி கிளை இணைந்துகல்லூரி கலையரங்கில் “இன்றையகாலகட்டத்தில்தாய்ப்பால்கொடுப்பதற்குதடையாகஇருப்பது - நவீன வாழ்க்கை முறையா? அல்லதுவிழிப்புணர்வுஇல்லாமையா?”என்றதலைப்பில்சிறப்புபட்டிமன்றம்நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்குமரவேல்தலைமைவகித்தார். துணைமுதல்வர்டாக்டர்அர்ஷியா பேகம்முன்னிலைவகித்தார்.குழந்தைகள் நலத்துறைதலைவர்டாக்டர் ஆர்.சுரேஷ்குமார் வரவேற்றார். உலக தாய்ப்பால்விழிப்புணர்வு வாரத்தின்நோக்கம்மற்றும்தாய்ப்பாலின்முக்கியத்துவத்தைஎடுத்துரைத்தார்.பட்டிமன்றத்திற்கு துணை மருத்துவ கண்காணிப்பாளர்டாக்டர் அருண்ராஜ்நடுவராகஇருந்துநகைச்சுவைகலந்தசிந்தனையூட்டும்வகையில்நிகழ்ச்சியைசிறப்பாகவழிநடத்தினார்.“விழிப்புணர்வுஇல்லாமையேதாய்ப்பால்கொடுப்பதற்கான மிகப்பெரிய தடையாகும்” என்ற அணியில்பேராசிரியர்டாக்டர்செந்தில்குமார்,இணைப்பேராசிரியர்டாக்டர் சிவகுருநாதன் மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் பத்மபிரியா ஆகியோர்கருத்துக்களைஅறிவியல்ஆதாரங்களுடனும்சமூகப்பார்வையுடனும் நகைச்சுவை கலந்து எடுத்துரைத்துபார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.“நவீன வாழ்க்கை முறையே தாய்ப்பால் கொடுப்பதற்கானமிகப்பெரியதடையாகும்” என்றஅணியில்இணை பேராசிரியர் டாக்டர் விஜய பாரதி, உதவி பேராசிரியர்டாக்டர் சிவகாமி சுந்தரி மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர்தங்கவேல்ஆகியோர்தங்களதுவாதங்களைநிகழ்காலவாழ்க்கைச் சூழல்கள், வேலைப்பளு, குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும்சமூககாரணிகளைஅடிப்படையாகக் கொண்டு விளக்கினர். இரு அணியினரின் கருத்துகளும் பார்வையாளர்களைசிந்திக்க வைத்ததோடு, அரங்கம் முழுவதும் கைதட்டல்களையும்வரவேற்பையும் பெற்றது.முடிவில்தாய்ப்பால்குறித்தசரியானவிழிப்புணர்வைதாய்மார்களுக்கும்,குடும்பஉறுப்பினர்களுக்கும்,சமூகத்திற்கும்ஏற்படுத்துவதன்அவசியத்தைநடுவர்வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலத்துறைபேராசிரியர்கள்,மருத்துவர்கள்,முதுநிலைமற்றும்இளநிலைமருத்துவமாணவர்கள்,செவிலியர்மாணவர்கள்,மருத்துவப்பணியாளர்கள் எனஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். தாய்ப்பால்விழிப்புணர்வுவாரநிகழ்வுகளின் ஒருபகுதியாகநடைபெற்ற இந்தபட்டிமன்றம்,அறிவியல்தகவல்களையும்சமூகப்பொறுப்புணர்வையும்பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பானநிகழ்வாக அமைந்தது.இதற்கானஏற்பாடுகளைகுழந்தைகள் நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள்நலக் குழுமம் (IAP) - திருச்சி கிளையினர் இணைந்துசிறப்பாகசெய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0