திருச்சி சங்கிலியாண்டபுரம் செல்வகாளியம்மன் கோவில் குத்துவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் பங்கேற்பு

Aug 3, 2026 - 08:57
 15
திருச்சி சங்கிலியாண்டபுரம் செல்வகாளியம்மன் கோவில் குத்துவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் பங்கேற்பு

திருச்சி சங்கிலியாண்டபுரம் செல்வ காளியம்மன் கோயில் குத்து விளக்கு பூஜை ஏராளமான பெண்கள் பங்கேற்பு

 திருச்சி

 திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் செல்வ காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் மற்றும் திருக்கரக உற்சவ விழா, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 26 ந் தேதி மகா கணபதி உடன் பூச்செரிதல் விழா தொடங்கியது. இதையடுத்து கடந்த 27ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 28ந் தேதி சக்தி கரகம் பாலக்கரை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை வந்து அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் 29ந்தேதி காளியம்மன் அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. 30ந்தேதி துர்க்கை அம்மன் அலங்காரம், 31ந்தேதி மாரியப்பன் அலங்காரம் நடைபெற்றது இதைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.மேலும் நேற்று ஆகஸ்ட் 1ந் தேதி சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று 2ந் தேதி காலை பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், அக்னி சட்டி, அழகு காவடி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். நாளை 3 ந் தேதி இரவு காளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து அம்பாள் ஊஞ்சல் அலங்கார நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 3 ந் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அம்பாள் ஊஞ்சல் அலங்காரம் நடைபெறுகிறது நாளை மறுநாள் 4 ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0