திருச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி,
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மண்டல ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை தலைமையில் திருச்சி மத்திய தொலை தொடர்பு அலுவலகம் முன்பு விபி கிராம்ஜி சட்டத்தை ரத்து செய்யவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை செயல்படுத்தவும், 200 நாள் வேலை, தினக்கூலி ரூ.700வழங்கவும், திட்ட நிதியை முழுமையாக வழங்கவும், மாநில அரசுகளின் சுமத்தப் கூடாது என்றும், கருவிழி ஸ்கேன் செய்வதை நிறுத்துவும், வேலைக்கு வரும் அனைவருக்கும் பணி வழங்க வலியுறுத்தியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட தலைவர் என்.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அகில இந்திய துணை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் நிர்வாகிகள் பழனிசாமி,கே.சிவராஜன், வசந்தா மணி, ஸ்டாலின் சந்திரன் கண்ணன் கந்தசாமி சலோமி மாரியப்பன் வெற்றிச் செல்வம்,முருகய்யன்,பிரகாஷ், ராஜேஷ் கண்ணா ஆர்.வாசு, கலையரசி அருள்செல்வன், அரியலூர் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0