வ.உ.சிதம்பரம்பிள்ளையை தரம் தாழ்ந்த பேச்சு தனியார் டி.வி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் மாநில தலைவர் டாக்டர் செந்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

Jul 28, 2026 - 19:36
Jul 29, 2026 - 08:26
 158
வ.உ.சிதம்பரம்பிள்ளையை தரம் தாழ்ந்த பேச்சு தனியார் டி.வி.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் மாநில தலைவர் டாக்டர் செந்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

வ.உ.சிதம்பரம் பிள்ளையை தரம் தாழ்ந்து பேச்சு தனியார் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் மாநில தலைவர் டாக்டர் செந்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 

திருச்சி 

திருச்சி வ.உ.சிதம்பரம் பிள்ளையை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி நிகழ்ச்சி நடத்தியதனியார் டிவி மேலே நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் மாநில தலைவர் மற்றும் வெள்ளாளர், வேளாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.ஜே. செந்தில் பிள்ளை தலைமையில் பேராசிரியர் முனைவர் மாநில பொருளாளர் மாணிக்கம் முன்னிலையில் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள்யை சந்தித்து மனுவை அளித்தனர். அந்த மனுவில் தனியார் டிவியில் ஒளிபரப்பய ஒரு நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா வி.உ.சி. சிதம்பரனார் பிள்ளையை மிகவும் இழிவான மற்றும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசிக் கொள்வதை ஒளிபரப்பு செய்துள்ளனர் . தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர் பிறப்பால் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது அவர் இந்திய சுதந்திர போராட்ட தியாகி ஆவார்.மேலும் அவரை கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேயரை நேருக்கு நேர் எதிர்த்து கப்பல் விட்டவர் என்றும் அனைவரும் அறிந்ததே, அப்படிப்பட்ட ஒரு தியாகியை இவ்வளவு கேவலமாக ஒரு தனியார் டிவியில் ஒளிபரப்பயதை தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் மேலும் அந்த அந்த டிவிநிர்வாகம்மீதுஒழுங்குநடவடிக்கை எடுக்குமாறும், தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில்கூறியுள்ளனர்.இந்நிகழ்வில் அருகிலுள்ள நமது சமூகத்தைச் சேர்ந்த அனைத்து உறவினர்களும் இந்த நிகழ்வில் போது தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநிலஇளைஞர்அணிஅமைப்பாளர்தங்கரத்தினகுமார், திருச்சி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாநில ஒருங்கிணைப்பாளர் டைமண்ட் பாலு பிள்ளை திருச்சி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வராஜ் மக்கள் தொடர்பு அலுவலர் வ.உ.சி. கண்ணன்ஆகியோர்கலந்துகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0