மக்கள் விரும்பும் நல்லாட்சியை விஜய் தருவதால் அதிமுகவினர் த.வெ.க. வருகிறாரார்கள். தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை அரசியல் எதிரி திமுக தான் திருச்சியில் வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி:
மக்கள் விரும்பும் ஆட்சியை விஜய் தருவதால் அதிமுகவினர் த.வெ.க வுக்கு வருகிறார்கள்: தமிழக வெற்றி கழகத்திற்கு கொள்கை, அரசியல் எதிரி திமுக தான் திருச்சியில் வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி:-
திருச்சி
மக்கள் விரும்பும் ஆட்சியை விஜய் தருவதால் அதிமுகவினர் த.வெ.க வுக்கு வருகிறார்கள். தமிழக வெற்றி கழகத்திற்கு கொள்கை, அரசியல் எதிரி திமுக தான் என்று திருச்சியில் வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு. ப. கிருஷ்ணன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- ஆளுகின்ற அரசாங்கம் தங்கள் ஆளுமைக்கு உட்பட்ட மாநிலத்தில் விரும்பத்தகாத முறையில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அந்த குடும்பத்திற்கு வேண்டிய அரசு உதவிகளை தருவது வாடிக்கை. கரூர் சம்பவம் நடந்தபோது எல்லா எதிர்க்கட்சிகளும் பணம் கொடுங்கள், அரசு வேலை கொடுங்கள் என ஒப்பாரி வைத்தன. இப்போது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக தடுக்க பார்த்தது. ஆனால் நீதி ஜெயித்ததால் ஏற்கனவே மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர் அரசின் கடமையை செய்வதற்காக நாளைக்கு (இன்று) கரூர் செல்கிறார். தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க தேவைப்பட்டால் தமிழக வெற்றி கழகமும், திமுகவும் ஒரே அணியில் செயல்பட வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளாரே என கேட்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரை திமுக கொள்கை எதிரி, அரசியல் எதிரி அதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பற்று கொண்ட அண்ணா திமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து விட்டு இன்றைக்கு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை தொடர்ச்சியாக வந்து தங்களை இணைத்துக் கொண்டு வருவதற்கு காரணம் மக்கள் விரும்பிய ஆட்சியை விஜய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சீமானை இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறீர்கள் இந்த யூகங்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் கருமண்டபம் பத்மநாதன், என்.எஸ்.பூபதி,நாகநாதர் பாண்டி, உஸ்மான் பாபு,ஏர்போர்ட் விஜி,புத்தூர் ராஜேந்திரன், ,புத்தூர் சதீஷ்குமார்,மலைக்கோட்டை வினோத்,முகமது அப்பாஸ், உய்ய கொண்டான் திருமலை பால்ராஜ்,தென்னூர் ஷாஜகான்,முன்னாள் கவுன்சிலர் ஹேமா முல்லை ராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.முன்னதாக திருச்சி மாநகர் மாவட்டம் அதிமுக பகுதி செயலாளர் புத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகிகள் பத்மநாதன் என்.எஸ். பூபதி,நாகநாதர் பாண்டி,உஸ்மான் பாபு ஆகியோர் ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0