காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஜூலை 15 முதல் ஒரு வாரம் நடைபெறும் காமராஜரின் 124 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றம்..

Jul 3, 2026 - 22:11
Jul 3, 2026 - 22:11
 5
காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஜூலை 15 முதல் ஒரு வாரம் நடைபெறும் காமராஜரின் 124 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றம்..

காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா சார்பில் காமராஜரின் 124 வது பிறந்த தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றம்

 திருச்சி,

 காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழகத் தலைவர் எஸ் வழக்கறிஞர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது. இதில் தேசிய செயலாளர் டாக்டர் என். சேதுராமன், எல். நோயல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் கே ஜான் குமார் முன்னாள் எம்பி நீல லோகிததாஸ் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்புரையாற்றினர். திருச்சி இளங்கோவன், டாக்டர் எம்.சுல்தான்சம்சூல்கபீர்,சிற்றம்பலம் வாழ்த்துரை வழங்கினார்.மற்றும் மத்தியகமிட்டிஉறுப்பினர்கள்புதுக்கோட்டை ஆர் விஜய ரகுநாதன், ராமநாதபுரம் கே குகன், மாநில கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன் பிரேம் ஆனந்த், திண்டுக்கல் சுசீலா ராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஜூலை 15 முதல் தமிழகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த தின விழாவைசிறப்பாககொண்டாடுவது, தமிழகத்தில் நடைபெற உள்ள காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா ஐம்பதாவது ஆண்டு விழா பொன்விழா குறித்தும் ஆலோசனைசெய்யப்பட்டது.காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பைபலப்படுத்துவதுஎன்பன உள்ளிட்டபல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0