திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி மேயர் அன்பழகன்தொடங்கி வைத்தார்.
திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
திருச்சி,
தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் நகர்ப்புறஉள்ளாட்சிஅமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு லுட்டலில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 குறித்த பயிற்சியை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் மாநகராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி மற்றும் துணைத் தலைவர், பேரூராட்சியை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியல் ஓய்வு பெற்ற மண்டல செயற்பொறியாளர் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஓய்வு பெற்ற நகராட்சி நிர்வாகம் செயற்பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் நகராட்சி நிர்வாகம், இணை இயக்குனர் ஜி. தனலட்சுமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மேயர் துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மைய ஒருங்கிணைப்பாளர் ஜெ. செல்லப்பா செய்திருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0