திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி திருவானைக்காவல் 103வது கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி வளர்ச்சி மு க ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சியில் மட்டுமே முழுமை பெற்றது முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேச்சு

Jun 24, 2026 - 14:04
 50
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி திருவானைக்காவல் 103வது கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி வளர்ச்சி மு க ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சியில் மட்டுமே முழுமை பெற்றது முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேச்சு

*ஸ்ரீரங்கம் தொகுதி வளர்ச்சி மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மட்டுமே முழுமை பெற்றது கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு* *ஆட்சியில் இருந்த போதும் இல்லாத போதும் மக்களுக்கு உதவும் ஒரே கட்சி திமுக தான்- சுப.வீரபாண்டியன் புகழாரம்*

திருச்சி, 

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்தட்ட உதவிகள்வழங்கும்விழாதிருச்சிதிருவானைக்கோவில் பகுதியில் பகுதிச் செயலாளர் கனகராஜ் தலைமையில்நடைபெற்றபொதுக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு, மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்புரையாற்றினர்.இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேசுகையில்... கலைஞரின் புகழையும் அவர் செய்த சாதனைகளையும் மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்த்தால் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் வளரும். ஸ்ரீரங்கம் தொகுதியைப் பொறுத்தவரை பல்வேறு கட்சிகள் மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் பல பணிகள் நடந்திருந்தாலும், மு.க.ஸ்டாலின் மற்றும் கலைஞரின் ஆட்சிக்காலங்களில் மட்டுமே முழுமையானமற்றும்உண்மையானவளர்ச்சித்திட்டங்கள்நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்கு உண்மையானஉழைப்பாளர்களாகவும், பாடுபடுபவர்களாகவும் திமுக தலைவர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர்.ஸ்ரீரங்கம்தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில ஏற்ற, இறக்கங்கள் இருந்திருந்தாலும், வரும் தேர்தல்களில் மக்களின் பேராதரவோடு மீண்டும் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். திமுகமீண்டும்ஆட்சிப்பொறுப்பேற்கவும், மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவும்அனைவரும்தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சுப.வீரபாண்டியன் பேசுகையில்:- 50 ஆண்டுகளுக்கு முன்பே டெல்லியால் கொடுக்கப்பட்ட மிகக் கடுமையான நெருக்கடி நிலையை தாண்டி வந்த பாரம்பரியம் இந்த கழகத்திற்கு உண்டு, ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்கு உதவும் ஒரே கட்சி திமுக தான். தேர்தல் வாக்குறுதிகளாக நிறைவேற்ற முடியாத பல பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியவர்களுக்கேதற்போதைய மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. 2006ஆம்ஆண்டுகலைஞர்முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசை மக்கள்சிலநேரங்களில்மறந்துவிடுகிறார்கள்.கலைஞர்தனதுவாழ்நாளில் பார்க்காத வெற்றிகளும் இல்லை, தோல்விகளும் இல்லை. எனவேதற்காலிகத்தோல்விகளைக் கண்டுதிமுகதொண்டர்கள்சோர்ந்துபோகாமல்,முன்னைவிடவேகமாக எழுந்துநிற்பார்கள்எனபேசினார்.இந்தபொதுக்கூட்டத்திற்குமுன்னதாகஏழை,எளியமக்களுக்கு தையல் மெஷின்,ஆட்டோ,சைக்கிள்உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கேஎன்நேருவழங்கினார். கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0