திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரெ.மதனா திமுகவில் இருந்து விலகி வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்
திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரெ.மதனா திமுகவிலிருந்து விலகி கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் திருச்சி, திருச்சி மத்திய மாவட்ட திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தவர் ரெ.மதனா அரசு பள்ளி ஆசிரியரான இவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தன்னை திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திமுகவில் இரந்து திடீரென விலகி த.வெ.க. டெல்டா மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். மேலும் அவரது தலைமையில் மத்திய மாவட்ட மாநகர மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் ரேவதி மற்றும் மோகனப்பிரியா, ரம்யா, சங்கீதா, பூர்ணிமா, ரா. கோமதி, ஆனந்தி, சுகன்யா, மஞ்சுளா, மோனிகா, சுமதி, ராஜி, விமலா, புனிதா, நைனிதா, பரமேஸ்வரி, வனிதா, நந்தினி, பீனப் பிரியா, நிவேதா உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணியைச் சார்ந்த நிர்வாகிகள் பலர் இணைந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0