திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா

Jun 18, 2026 - 23:23
 21
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா

 திருச்சி,

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு கீழ கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப்சந்த் தலைமை வகித்தார். கேர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சாந்தி அனைவரையும் வரவேற்புரையாற்றி , பட்டமளிப்பு விழா அறிக்கையை வழங்கி கல்லூரியின் கல்வி சாதனைகள் மற்றும் முக்கிய முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக சிஸ்கோ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டி.என்.பி. சுகுமார் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர்களின் சாதனங்களை பாராட்டி பேசும்போது:- தொழில் துறை வெற்றியை அடைவதற்கு அர்ப்பணிப்பு, உணர்வு, நேர்மை, புதுமை சிந்தனை மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் முடிவு எடுக்க வேண்டும் என்றும், தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் பெற்றோர்கள் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பட்டம் பெற்ற மாணவர்கள் பல்வேறு முதுநிலை மற்றும் இளநிலை பட்டப்படிப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் சிறப்பு பிரிவுடன் கூடிய கணினி அறிவியல் மற்றும் பொறியியல் முதுநிலை படிப்பில் 3 மாணவர்கள் பட்டம் பெற்றனர். மேலாண்மைத் துறையில் முதுநிலை வணிக நிர்வாகம் படிப்பில் 67 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இளைநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்க்கை முன்னறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவுகள 48 மாணவர்கள் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் 61 மாணவர்கள் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் 20 மாணவர்கள் , இயந்திரப் பொறியியல் பிரிவில் 21 மாணவர்கள், மற்றும் சிவில் பொறியியல் பிரிவில் 7 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0