திருச்சியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Jun 12, 2026 - 13:46
 10
திருச்சியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருச்சியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி புதிதாக வாடகை வீட்டிற்கு சென்ற போது விபரிதம் போலீசார் விசாரணை திருச்சி, திருச்சி தென்னூர் ஒத்த கோபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாபர்அலி கான் (வயது51) இவருக்கு அமீர்கான்,சர்தார்கான் என 2 மகன்கள் உள்ளனர்.இவரது மகன் அமீர் கானுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து உள்ளது,இந்நிலையில் இவரது மகனுக்கு ஜீவா நகர் காமராஜர் தெருவில் வீடு பார்த்துள்ளார். அந்த வீட்டிற்கு குடிபோக பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது நேற்று நள்ளிரவு கயிற்றில் கட்டி பீரோவை பால்கனியில் தூக்கியபோது, துரதிர்ஷ்டவசமாக அந்த பீரோ கம்பத்தில் பட்டதில், சர்தார் கான் (வயது 21) என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0