திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டம்

May 30, 2026 - 18:27
 8

1.

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் திருவோடு ஏந்தி நடத்தினர் திருச்சி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் ஐந்து ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தார்.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தற்போது பாரபட்சத்துடன் பயிர் கடன்களை தள்ளுபடி செய்துஅறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டும் தான் போய் சேரும் எனவே அனைத்து விவசாயிகளும் பயனடைய வகையில் கடன் முழுவதையும் கண்டுபிடிக்க செய்ய வேண்டும் என்று கூறி தமிழக முழுவதும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து கலந்து சில நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்தியும், பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டமும் அதனைத்தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0