ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தலைமையில் நடந்தது
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா குறித்து முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாள் தலைமையில் நடந்தது
திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் புகழ்பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 9, 2026 அன்று தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு (வைகுண்ட ஏகாதசி) டிசம்பர் 20, ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. 21 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் பொன்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவை எவ்வித தொய்வுமின்றி மிகச் சிறப்பாக நடத்துவது குறித்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தடையற்ற குடிநீர் வசதி, தற்காலிக மற்றும் நிரந்தர கழிப்பிட வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வெளியூர்களில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி, நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது தகுந்த நிழற்குடைகள் மற்றும் பாதுகாப்பு அரண்களுடன் சாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0