தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்தது
தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி
திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்தது
திருச்சி,
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் குழப்பங்களுக்கு காரணமாக உள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவரை உடனடியாக பதவிவிலகி அப்ரூவராக (அரசுத் தரப்பு சாட்சியாக) மாற வேண்டும் எனவும், வாக்குத் திருட்டுச் சதியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை தாங்கினார். திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் கண்டன உரையாற்றினார். தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொறுப்பாளர்கள் திரவியம், இல.பாஸ்கர், சிவசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் முரளி, மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், ஆராய்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் பாண்டியன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் அருள், மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், சத்தியநாதன், விமல், அசோகன், பூக்கடை பன்னீர், செந்தமிழ் செல்வன், ராஜா, சக்கரபாணி, விமல், கோட்டதலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல் ராய், அழகர், கிருஷ்ணா, பகதுர்ஷா, கனகராஜ், எட்வின், சிவாஜி சண்முகம், ராஜேஷ்வரி, குத்தூஸ், சிக்கல் சண்முகம், விக்டர், சம்சுதின், அணி தலைவர்கள் மீனவர் அணி தனபால், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், அஞ்சு, கவிதா நாச்சியார், கோகிலா, வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், ஐடி பிரிவு கிளமென்ட், ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், கலைப்பிரிவு சுப்புராஜ், இலக்கியஅணிபத்பநாபன்,வார்டுநிர்வாகிகள்உள்ளிட்டஏராளமனோர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0