திருச்சியில் இந்திய டிராவல் ஏஜெண்ட் சங்க (தாய்) தென் தமிழக கிளை சார்பில் இரட்டை வைர விழா டிராவல் ஏஜெண்டுகள் சுற்றுலாத்துறை இணைந்து செயல்பட்டால் சிறந்த வளர்ச்சி காணலாம் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பேச்சு

Aug 17, 2026 - 18:29
Aug 17, 2026 - 18:30
 4
திருச்சியில் இந்திய டிராவல் ஏஜெண்ட் சங்க (தாய்) தென் தமிழக கிளை சார்பில் இரட்டை வைர விழா டிராவல் ஏஜெண்டுகள் சுற்றுலாத்துறை இணைந்து செயல்பட்டால் சிறந்த வளர்ச்சி காணலாம் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பேச்சு

திருச்சியில் இந்திய டிராவல் ஏஜெண்ட் சங்க (தாய்) தென் தமிழக கிளை சார்பில் இரட்டை வைர விழா

 டிராவல்ஏஜெண்டுகள்சுற்றுலாத்துறை இணைந்து செயல்பட்டால் சிறந்த வளர்ச்சி காணலாம்

சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பேச்சு 

திருச்சி

 இந்திய டிராவல் ஏஜென்சி சங்க (தாய்) தென் தமிழக கிளை சார்பில் இரட்டை வைர விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ஹோட்டலில் நடந்தது. விழா மலரை சங்கத்தில் தேசிய தலைவர் சுனில் குமார் வெளியிட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்பெற்றுக்கொண்டார். அப்போது ராஜேஷ்குமார் பேசும் பது:- டிராவல் ஏஜெண்டுகள் சுற்றுலாத்துறை இணைந்து செயல்பட்டால் சிறந்த வளர்ச்சி காணலாம் சுற்றுலாத் துறையும் இந்து அறநிலைய துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.80வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் "தாய்'' அமைப்பு 75 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவது சிறப்பாகும். சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். சுற்றுலாத்துறை மேம்பாட்டில் டிராவல் ஏஜெண்டுகளில் பணி மகத்தான பணி என்றார். தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசும் பது:- மக்கள் மாவட்டம் தேசம் கலாச்சாரம் ஆகியவற்றை இணைக்கும் பணிகளை சுற்றுலாததுறை செய்து வருகிறது‌‌. டிராவல் ஏஜெண்ட்கள் சுற்றுலாத் துறையின் தூதுவர்கள் என்றால் அது மிகையில்லை. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்கள் கடல் காடு உணவு மருத்துவம் மற்றும் ஸ்ரீரங்கம் திருச்செந்தூர் போன்ற ஆன்மீக தலங்கள் உள்ளன. முதல்வர் சுற்றுலாத் தறை மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தந்து வருகிறார். ஸ்ரீரங்கத்தில் அக்காரவடிசல் புகழ்பெற்று விளங்குகிறது. கல்லணை ஸ்ரீரங்கம் முக்கொம்பு மலைக்கோட்டை போன்ற பல இடங்களுக்கு சுற்றுலாப் பணிகள் அதிக அளவில் வருகின்றனர். சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு 75 ஆண்டுகள் சிறந்த அனுபவம் கொண்ட தாய் அமைப்பு தனது முழு ஒத்துழைப்பை தந்தால் சிறந்த வளர்ச்சி காண முடியும் என்று பேசினார். திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் (பொ) கோபாலகிருஷ்ணன் பேசும்போது:- "தாய்''அமைப்பின் கடின உழைப்பு நம்பிக்கை ஆகியவற்றை இரட்டை வைர விழா வெளிப்படுத்துகிறது. திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிக அளவிலான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 20 ஆண்டுகள் சுற்றுலாத்துறைக்கு பொற்காலமாக விளங்கும். விமானத்துறை டிராவல் ஏஜெண்டுகள் இணைந்து செயல்பட்டால் சிறந்த வளர்ச்சி காணலாம்'' என்றார் ‌. தாய் சங்கத்தின் தமிழக கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது '"1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு கடுமையான உழைப்பு காரணமாக இரட்டை வைர விழா கொண்டாடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சங்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்"" என்றார். சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய சுற்றுலா தெற்கு மண்டல இயக்குனர் வெங்கடேசன், தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் ஜெயசீலன், இந்திய டிராவல் ஏஜெண்ட்ஸ் சங்க தேசிய செயலாளர் சுனில் குமார், அரபிந்தோ ரவிச்சந்திரன், சங்கச் செயலாளர் ஷேக் அப்துல்லா, பொருளாளர் பத்தி நாதன், சிவானி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0