திருச்சி மா காவேரி மருத்துவ மனை நடத்தும் உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி

Aug 1, 2026 - 19:54
 180
திருச்சி மா காவேரி மருத்துவ மனை நடத்தும்  உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி

திருச்சி மா காவேரி மருத்துவமனை நடத்தும் உலக பாலூட்டும் வார விழிப்புணர்வு பேரணி

திருச்சி

 திருச்சி மா காவேரி மருத்துவமனை நடத்தும் விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகளவில் உலக பாலூட்டும் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் தாய்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் தாய்மார்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கும். இவ்விதமான முக்கியமான நிகழ்வை முன்னிட்டு, குறைமாத மற்றும் எடை குறைவுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சை மையமாக விளங்கும் திருச்சி மா காவேரி மருத்துவமனை. ஒரு விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்தது .இந்த பேரணி, ரோட்டரி கிளப் மெட்ரோ, இன்னர் வீல் கிளப் மெட்ரோ திருச்சி, தேசிய பச்சிளம் குழந்தை மருத்துவ கழகம் திருச்சி, மற்றும் இந்திய குழந்தை மருத்துவக் கழகம் திருச்சி கிளை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நீதித்துறை நடுவர், பாலாஜி ,தொடங்கி வைத்தார். பேரணியை மா காவேரி மருத்துவமனை மூத்த பச்சிளம் குழந்தை சிறப்பு நிபுணர் டாக்டர் கே. செந்தில் குமார் தலைமையேற்றார். குழந்தைகள் நல சிறப்பு நிபுணர். டாக்டர். மேகநாதன் மற்றும் பெசிலிட்டி இயக்குநர் அன்புசெழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆண்டின் மையத் தலைப்பு: “தாய்ப்பாலூட்டுதல் வளங்குன்றா வாழ்க்கையின் ஆரம்பம்; தாய்ப்பாலூட்ட ஆதரவளிக்கும் அமைப்புகளை பலப்படுத்துவோம்” இந்த நிகழ்வில் மா காவேரி மருத்துவமனை நிர்வாகிகள், ரோட்டரி மற்றும் இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள், கே.எம்.சி நர்சிங் கல்லூரி மாணவியர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர். பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆரம்பித்து மா காவேரி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.திருச்சி மா காவேரி மருத்துவமனை சமூக நலனை முன்னெடுத்துச் செல்ல இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0