திருச்சியில் மேம்பால பணிகள் மற்றும் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் லட்சிய ஜனநாயக கட்சியினர் மனு அளித்தனர்

Jul 29, 2026 - 00:07
 90
திருச்சியில் மேம்பால பணிகள் மற்றும் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் லட்சிய ஜனநாயக கட்சியினர் மனு அளித்தனர்

திருச்சியில் மேம்பாலப்பணி, வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் லட்சிய ஜனநாயக கட்சியினர் மனு

திருச்சி,

 லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தில்லைசதாம் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்கை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.குறிப்பாக, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தார்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.திருச்சி மாநகரின் மையப்பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்களின் போக்குவரத்து சிரமத்தை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மனுவல பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து 2 மாத காலத்திற்குள் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்றுஉறுதியளித்தார்.அப்போது திருச்சி மாநகர்மாவட்டநிர்வாகிகள் ஷேக்மைதீன்,சிவராஜ், அப்பாஸ், நவநீத கிருஷ்ணன், காதர், சேகர், ரங்கராஜ், வீரமணி கண்டன் , ஜெய் சிங்ராஜாஉள்படபலர்உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0