திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனம் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனம் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு
திருச்சி
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி விவசாய அணி மாநில துணை செயலாளராக பேரூர் கண்ணதாசன்,மாவட்ட அவைத்தலைவர் சேவியர், மாவட்ட இணை செயலாளர் சிவகாமி, மாவட்ட துணை செயலாளர் கவிதா ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் சாத்தனூர் வாசு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.பி.டி. அழகர்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோனா விவேக், மகளிர் அணி மாவட்ட செயலாளர் கண்ணகி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பிரவீன் குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வெங்கடேசன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் ஜார்ஜ், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் பி.சி. தமிழழகன், மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் அருண் பிரசாத், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர் தினேஷ், இலக்கி அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகன், அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் ஆதிகேசவன், இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சந்துரு,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் விஜயராஜ், டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குமார், மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி, வையம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் அந்தோணி பீட்டர், சிறுகமணி பேரூராட்சி கழக செயலாளர் கண்ணுசாமி, பொதுக்குழு உறுப்பினர் திருவரங்கம் ஜெயந்தி ஆகியோரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் ஆர். மனோகரனை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0