25வது சண்முகா நகரில் பூங்கா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். திமுக கவுன்சிலர் நாகராஜன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Jul 20, 2026 - 13:43
 101
25வது சண்முகா நகரில் பூங்கா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். திமுக கவுன்சிலர் நாகராஜன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

25வது வார்டு சண்முகா நகரை பூங்கா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் திமுக கவுன்சிலர் நாகராஜன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்

திருச்சி,

ஜூலை.20- திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட எங்களது 25வது வார்டு சண்முகா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என வசித்து வருகின்றனர். பெரியவர்கள் நடைபயற்சி மேற்கொள்ளவும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும் மற்றும் குழந்தைகள் விளையாட முடியாத சூழ்நிலைகள் உள்ளது. சண்முகா நகர் மேற்கு விஸ்தரிப்பில் (10வது கிராஸ்) பூங்கா அமைத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் மனு அளிக்கப்பட்டது. அதன்படி, சண்முகா நகர் மேற்கு விஸ்தரிப்பு (10வது கிராஸ்) பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தோக்க தொட்டி அருகில் சுமார் ரூ.60,00,000/- மதிப்பீட்டில் மாநகராட்சியால் இடம் ஒதுக்கப்பட்டு பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று கொண்டு இருந்த நிலையில், தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி, மேற்கொண்டு பூங்கா அமைக்கும் பணிகளை துவங்க ஆணை பிறப்பிக்குமாறு 25வது மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாகராஜன் , பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0