தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம்.
தேமுதிக வுடன் பேச்சுவார்த்தை. நடிகர் விஜய் கூட பாஜக கூட்டணியில் இணையலாம். உசிலம்பட்டியில் பாஜக பிரச்சார பிரிவு மாநில தலைவர் பாண்டியராஜன் பேட்டி: உசிலம்பட்டி,ஜன.22- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு பாஜக மதுரை மேற்கு மாவட்ட பிரச்சார பிரிவு சார்பில், பாரத பிரதமரின் 11 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாநில பிரச்சார பிரிவு தலைவர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய, பாண்டியராஜன் பாரத பிரதமரின் 11 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை உசிலம்பட்டியில் நடத்தியுள்ளோம்., மதுரைக்கு எய்ம்ஸ் கொடுத்தது முதல் வந்தே பாரத் கொடுத்தது வரை பாரத ஜனதா கட்சி செய்த நல்ல திட்டங்களையும், கல்வியையும், புத்தகத்தையும் கொடுக்க வேண்டிய பிள்ளைகள் கையில் கஞ்சாவையும், மது போதையையும் கொடுத்த திமுக அரசை எதிர்த்து நடைபெற்ற பொதுக்கூட்டம் இது. தேசிய ஜனநாயக கூட்டணி நாளுக்கு நாள் ஆட்சியை பெறக்கூடிய சூழல்நிலை வந்து கொண்டிருக்கிறது. எங்களது கூட்டணியில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்துள்ளார் . அது மகிழ்ச்சிகரமான செய்தி. ஏற்கனவே, பாமகவின் அன்புமணி, ஐ.ஜே.கே. அதிமுக, பாரத பிரதமர் வருகை தர இன்னும் 48 மணி நேரம் உள்ளது. இந்த 48 மணி நேர வருகைக்குள்ளே திமுகவின் தோல்வி முகம் தமிழக மக்களுக்கு தெரிய வரும்.மதுராந்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அறியப்படும்.இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக திமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாது என்கிற நிலைக்குஉழைக்கபாஜகதொண்டர்கள் தயாராக இருக்கிறோம். இந்திய அரசியலில் காமராஜர் கிங் மேக்கராக இருந்தார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் கிங் மேக்கராக நிச்சயம் இருப்பார். திமுக ஆட்சியை முடிவு கட்டுவதற்கு மாநில தலைவர் மற்றும் மூத்த தலைவர் அண்ணாமலை உழைப்பும், கூட்டணிக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கும் பாஜக, இனி ஒரு முறை திமுக ஆட்சி தொடர்ந்தால், ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என என்னுடைய சின்னம் தாமரையாக இருந்தாலும் சரி, இரட்டை இலையாக இருந்தாலும் சரி, குக்கராக இருந்தாலும் சரி, மாம்பழமாக இருந்தாலும் சரி தேசிய ஜனநாயக கூட்டணியின் எந்த சின்னமாக இருந்தாலும் நரேந்திர மோடியே சட்டமன்ற உறுப்பினராக நிற்பது போல் களப்பணிஆற்றஉத்தரவிட்டுள்ளார்.ஒபிஎஸ் எங்களின் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக போட்டியிட்டவர், பாஜகவை நம்பிய யாரையும் பாரத பிரதமர் ஒருகாலத்திலும் கைவிட மாட்டார். ஒபிஎஸ்க்குமிகுந்தமுக்கியத்துவமும், தகுந்த மரியாதையை நரேந்திர மோடியின் கைகள் கைவிடாது. தேமுதிக வுடன் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருக்கிறோம், நடிகர் விஜய் கூட பாஜகவில் இணையலாம்.இன்னும் கூட்டணி பலம் பெரும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும்.டிடிவி தினகரனையும் ஒபிஎஸ்-யையும் பிரித்துவிடலாம் என எண்ணியது, திமுகவிற்கு வாழ்க்கை கொடுத்தவர் எம்ஜீஆர், அதேபோல,அதிமுகதொண்டர்களை வைத்து திமுக கட்சி நடத்துகிறது, அங்கு யாருமே திமுகவினர் கிடையாது. இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறும், திருமாவளவனும் வெளியேறுவார்.திமுகதமிழகத்தில் தனித்து விடக்கூடிய கட்சியாக மாறும்.டிடிவிதினகரன்வந்துவிட்டார், நாளை தேமுதிக கூட பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிடும்என,பேட்டியளித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0